சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஜாபிர் நியமனம்

🕔 October 12, 2017

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான அமைப்பாளராக பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராகக் கடமையாற்றும் எம்.எம். ஜாபிர் (ஜே.பி)  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிமை வழங்கி வைத்தார்.

சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போதே, தனக்கான கடிதத்தை, ஜனாதிபதியிடமிருந்து ஜாபிர் பெற்றுக் கொண்டார்.

மேற்படி நிகழ்வில், முன்னாள் ஜனாபதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த மற்றும் ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் மூத்த பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம். ஜாபிர், சமூக சேவையில் மிக நீண்ட காலமாக அர்ப்புடன் செயற்பட்டு வருவதோடு, சுமார் 20 வருடங்களாக அரசியல் களத்தில் நேரடியாகவும் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் இவர் போட்டியிட்டமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்