தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு

🕔 October 12, 2017

தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை மோசடியாக பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஷலில முனசிங்க, இலங்கை குடியுரிமை அற்றவர் என்றும், அவர் ஒரு பிரித்தானியப் பிரஜை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளர்.

லிற்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ஷலில, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையினை அடுத்து, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஷலில முனசிங்க பிரித்தானியப் பிரஜை என்றும், அவர் இலங்கையில் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்ட வீசா கால எல்லை, எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தக் குற்றத்துடன் தொடர்புபட்டவர் எனும் சந்தேகத்தில், முன்னர் கைது செய்யப்பட்ட ஜனக சமிந்த என்பவர், இலங்கை மற்றும் பிரித்தானிய நாடுகளில் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டவர் எனவும் தெரியவருகிறது.

தொடர்பான செய்தி: தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்