லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 October 11, 2017

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ்  நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை தொடர்ந்தும் இம்மாதம் 25ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்வன் நாட்டிலுள்ள ஃபா ஈஸ்டன் எனும் வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள வங்கியொன்றுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டில் முனசிங்க கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஷசிலவை கோட்டே நீதிவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே, அவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்பான செய்திகள்: 

  1. தாய்வான் வங்கிலிருந்து 17 கோடி ரூபாய், இலங்கைக்கு பரிமாற்றம்: லிற்றோ கேஸ் கம்பனி தலைவர் கைது
  2. அன்னம் சின்னத்தின் தலைவர்தான், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் கைதாகியுள்ளார்; நாமல் ராஜபக்ஷ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்