உபயோகிக்கப்பட்ட 100 பெரல் தேங்காய் எண்ணெய், விற்பனை நிலையத்தில் சிக்கியது

தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள், தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இந்த சட்டவிரோத வியாபார நடவடிக்கையைக் கண்டுபிடித்தனர்.
பாவித்த தேங்காய் எண்ணெய், நுகர்வோரின் பாவனைக்கு வழங்காமல் வேறு பாவனைக்கே விற்கப்படுவதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்த போதும், அதற்கான எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லையென சுற்றிவளைப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் மனித பாவனைக்கு தடைசெய்யப்பட்ட ரசாயனப் பதார்த்தங்களை அடைக்கும் கொள்கலன்களில் தேங்காய் எண்ணெய்யை நிரப்புவதற்கு தயார்நிலையில் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நாடெங்கிலும் சட்டவிரோதமாக விற்பனை செய்வோரையும், கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக கொள்ளை லாபமடிக்கும் வர்த்தகர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.