தாய்வான் வங்கிலிருந்து 17 கோடி ரூபாய், இலங்கைக்கு பரிமாற்றம்: லிற்றோ கேஸ் கம்பனி தலைவர் கைது

🕔 October 9, 2017

லங்கையிலுள்ள வங்கியின் தனியார் கணக்கொன்றில், தாய்வானின் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட 1.1 மில்லியன் டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 17 கோடி ரூபாய்) பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க இன்று திங்கட்கிழமை பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார்.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி 60 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பணம், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் தாய்வானின் குற்றப் புலனாய்வுப் பணியகம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தது.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிலிருந்து இலங்கை வங்கியின் தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதற்கு முயன்ற கணக்கு உரிமையாளர் ஜே.சி. நம்முனி என்பவர் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

லிற்றோ கேஸ் நிறுவனத் தலைவர், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்