வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கண்காணிக்க, புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் மனோ கணேசன்

🕔 October 8, 2017

வெறுப்பூட்டும் வகையில் பேசுவோரைக் கண்காணிப்பதற்கென புதிய அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வெறுப்பூட்டும் பேச்சுக்களை சில குழுக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பானது, வெறுப்பூட்டும் வகையில் பேசுவோரைக் கண்காணித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு சிபாரிசு செய்யும் எனவும் அமைச்சர் விபரித்தார்.

ரோஹிங்ய அகதிகள் கல்சிசையில் தங்கியிருந்த போது நடைபெற்ற சம்பவத்தில், வெறுப்பூட்டும் வகையில் சிலர் பேசியமையினைக் காணக் கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவமானது இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், இது போன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்