அம்பாறை கரையோர பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை; சிறு சேதங்கள், மின்சாரமும் துண்டிப்பு

🕔 August 3, 2015

Tree - 001

– றியாஸ் ஆதம் –

ம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை, பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தமை காரணமாக, ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இடி, மின்னலுடன் – கடும் மழை பெய்ததோடு, பலமான காற்றும் வீசியது. இதனால், பிரதேசங்களிலுள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக, இப் பகுதியில் சில மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

கடுமையாக வீசிய காற்றின் காரணமாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரமொன்று வீழ்ந்தது. ஆயினும், பெரிதான சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

இப் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மழை பெய்துள்ளது.

எவ்வாறிருந்தபோதும், தற்போது – இப் பிரதேசங்களில் நெல் அறுவடை நடைபெற்று வருகின்றமையினால், தற்போதைய மழையானது, அறுவடை நடவடிக்கைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Tree - 002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்