இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர்

🕔 October 7, 2017

லங்கையில் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார்.

உலகில் முதலாாவது பெண் பிரதமரையும், உலகில் முதலாவது பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய நாடு எனும் புகழையுடைய நமது தேசத்தில்தான், இவ்வாறான குற்றம் நடைபெறுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

மாகாண தொழில்துறை அமைச்சு ஏற்பாடு செய்த, புடவை மற்றும் வர்த்தகக் கண்காட்சி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

பாடசாலை மாணவிகளே, இவ்வாறான குற்றத்தில் அதிகமாகபப் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பொலிஸாரின் புள்ளி விபரங்களின்படி, வன்புணர்வுக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறாள்.

பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது, எழுதப்படுகிறது. ஆனாலும், பெண்கள் அடிக்கடி வன்புணர்வுக்கு உள்ளாகின்றமை கவலைக்குரியதாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்