வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு
🕔 May 25, 2015



புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்ட பூரண ஹர்த்தால் நடவடிக்கைக்கு, கல்முனை முஸ்லிம்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர்.
மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதி உச்சபட்ச தண்டனையினை வழங்குமாறு வலிறுத்தியும், கல்முனை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது, கல்முனை நகரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்கள், மற்றும் சந்தைத் தொகுதிகளை மூடி, ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்கள்.
இதேவேளை, கல்முனையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்தமையினால், கல்வி நடவடிக்கையும் ஸ்தம்பிதமடைந்தது.
மேலும், இன்றைய தினம் – மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து – கல்முனை பிரதேச தமிழ் மாணவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர். கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேச தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Comments



