அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை

🕔 October 4, 2017

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பதவிகள் வறிதாகியுள்ள நிலையில், அவர்களை – அந்த சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது, ‘உறுப்பினர்கள்’ என்று இப்பாதும் குறிப்பிட்டுக் காட்சிப்படுத்தியுள்ள அபத்தத்தைக் காண முடிகிறது.

கிழக்கு மாகாணசபையின் பதவிக் காலம் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, அதன் உறுப்பினர்கள் அனைவரின் அங்கத்துவங்களும் வறிதாகி விட்டன. 30ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், அவர்கள் அனைவரும் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர்களாக மாறி விட்டனர்.

இருந்தபோதும், கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், அங்கத்துவம் இழந்த உறுப்பினர்களை, இன்னும் உறுப்பினர்கள் என்றே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இது மிகவும் அபத்தமானதொரு செயற்பாடாகும்.

ஒரு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது, இவ்வாறு பொறுப்புணர்வற்று, கோமா நிலையில் இருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

கல்வி தொடக்கம், அநேகமான துறைகளில் – கிழக்கு மாகாண சபையானது, தேசிய ரீதியாக கடைசியிடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, இது போன்ற அலட்சியமான கோமா நிலைச் செயற்பாடுகளே பிரதான காரணமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்