ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி
🕔 October 4, 2017
– க. கிஷாந்தன் –
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் பணிபுாிந்த சுமார் 200 பெண்கள் வரையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் சுகயீனமுற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருந்தபோதும், உணவு நஞ்சானமையினால் இவர்களுக் இந்த திடீர் சுகயீனம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.