மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல்

🕔 October 3, 2017

ரோஹிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமைச்சர் ராஜித சேனாரத்ன இகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவருடைய ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாமல் ராஷபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகிவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இலங்கைக்கு அதிகள் வந்த போது, இன்று தாக்க வரும் பிக்குகள் அன்று எங்கிருந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனூடாக இவர், இதன் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளார் எனும் விடயத்தை கூற வருகிறார். நாம் இனவாதிகள் என்றால், ஏன் நாம் அன்று மியன்மார் அகதிகளை சிறு துரும்பும் அணுகாத வகையில் பாதுகாக்க வேண்டும். மியன்மார் அகதிகளை நாம் பாதுகாத்தது கூட தவறானது  என்றும், இவ்வாட்சியின் நடைபெற்றதை போன்று அவர்களை தாக்கி இருக்க வேண்டுமெனவும் கூற வருகிறார்களா?

பல விடயங்களில் சர்வதேசங்களை நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்த எங்களுக்கு இவர்களை எதிர்க்கவும் முடிவு செய்திருந்தால், அது ஒரு பெரிய விடயமாக இருந்திருக்காது.

இவ்வாட்சியில் மியன்மார் அகதிகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், அது இந்த ஆட்சியாளர்களின் குறைபாடு. அதற்கு எம்மை கூறி தப்பிக்க வர வேண்டாம். அன்று நாம் பாதுகாத்த ஒரு விடயத்தை, இன்று இந்த அரசாங்கத்தினால் பாதுாக்க முடியாமல் திணறுவது இவ்வாட்சியில் இனவாதத்தின் வேரூண்றுகை எந்தளது ஆழமானது என்பதை அறிந்துகொள்ளலாம்.

மியன்மார் அகதிகள் இந்த நாட்டில் பல வருடங்கள் இருந்துள்ளார்கள் என்ற செய்தி கூட, பலருக்கு அமைச்சர் ராஜித சேனாரத்தன கூறியே தெரிந்திருக்கும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல, முன்னாள் ஜனாதிபதியின் அருமையை இப்போதுதான் மக்கள் உணர்வார்கள்.

அமைச்சர் ராஜித போன்றார்கள் முன்னாள் ஜனாதிபதியை இகழ்வதாக நினைத்து தனது வாயாலேயே அவருடைய பெருமைகளை கூறிக்கொண்டிருக்கின்றார்.

உண்மை ஒரு போது அழிந்துவிடாது. முதலில் இப்படி தன்னை அறியாமல் முன்னாள் ஜனாதிபதியை புகழும் அமைச்சர் ராஜிதவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்