மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

🕔 October 1, 2017

மாகாணசபை தேர்தல் சட்டமூலம் வரையப்பட்டபோது, தேர்தல் ஆணைக்குழு ஓரங்கட்டப்பட்டதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புதிய தேர்தல் சட்டமொன்றை வரையும்போது,  தேர்தல் ஆணையாளரை அல்லது ஆணைக்குழுவை அணுகி ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த சட்டத்தைத் திருத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டியதாகவும், வெளிப்படைத்தன்மையினைப் பேணவில்லை எனவும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் கவலை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்