இலங்கையில் மொத்தமாக 1159 மரண தண்டனைக் கைதிகள்; 38 பேர் பெண்கள்

🕔 September 29, 2017

லங்கையில் மொத்தமாக 1159 மரண தண்டனைக் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வித்தியா கொலை வழங்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 07 பேரும் அடங்குகின்றனர்.

மஹர, வெலிக்கட, குருவிட்ட, பதுளை, களுத்துறை மற்றும் தும்பறை சிறைச்சாலைகளில் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 826 பேர் தமக்க வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர்.

மரண தண்டனைக் கைதிகளில் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் 1802ஆம் ஆண்டு தூக்கு தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி, முதலாவது தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

இருந்தபோதும் 1956ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க, மரண தண்டனையை இல்லாமலாக்கினார்.

ஆயினும், பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டமையை அடுத்து 1959ஆம் ஆண்டு, மீண்டும் மரண தண்டனை அமுலாக்கப்பட்டது.

எனினும், தற்போது மரண தண்டனை விதிக்கப்படுவோருக்கு, அத்தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.

இலங்கையில் இறுதியாக 1976ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்