ரோஹிங்ய அகதிகள் விவகாரம்: கல்கிஸ்சை வீடு சென்று, காவாலித்தனம் புரிந்தவர்களில் ஒருவர் கைது
ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த கல்சிஸ்சை வீட்டுக்குச் சென்று காவாலித்தனம் புரிந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டவர்களில் ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், மேற்படி நபரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் மொறட்டுவ – ராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.
கைது செய்யப்பட்டவர் கல்சிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிக்குகள் சிலருடன் மேலும் பலர் இணைந்து, ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று பாரியளவில் காவாலித்தனம் புரிந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்படி ரோஹிங்யர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் இவ்விவகாரம் தொடர்பில் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.