அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ரங்க கலன்சூரிய, தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
சிரேஸ்ட ஊடகவியலாளரான கலாநிதி கலன்சூரிய, இலங்கை பத்திரிகை முறைப்பாடு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையிலேயே, கடந்த ஜுன் மாதம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இவர் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, டென்மாக்கை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பான ஆசியா பசுபிக்கின் பிராந்திய ஆலோசகராகவும், இவர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.