மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முன்னாள் நீதியரசர் மனுத்தாக்கல்

🕔 September 28, 2017

நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா, உச்ச நீதிமன்றில் மனுவொன்றினை இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மாகாணசபை திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சட்ட விரோதமாக அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டுள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ள முன்னாள் நீதியரசர், எனவே அதனை ரத்துச் செய்யுமாறு  கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி மேற்படி சட்ட மூலம் நாடாளுமன்றில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டமையினை அடுத்து, கடந்த 22ஆம் திகதி, இதில் சபாநாயகர் கையெழுத்திட்டார்.

உரிய ஒழுங்கு முறைமைகளைப் பின்பற்றாமல் மாகாணசபை திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்