கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், மஹிந்த கட்சியில் இணைவு

🕔 September 28, 2017

கிழக்கு மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவர், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியில் இன்று வியாழக்கிழமை இணைந்து கொண்டனர்.

டப்ளி.யு டி. வீரசிங்க, ரி.எம். ஜயசேன மற்றும் சந்ரா பொடி மெனிகே ஆகியோரே, இவ்வாறு கட்சி மாறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சுதந்திரக்கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ள இவர்கள், அதற்கு எதிராக பலமான சக்தியொன்றினைக் கட்டியெழுப்புவதற்காகவே, பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளர்.

மலர் மொட்டினை சின்னமாகக் கொண்டுள்ள பொதுஜன பெரமுன கட்சியானது, முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் செயற்பட்டு வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்