30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம்

🕔 September 27, 2017

னிதர்கள் 30 பேரை காட்டுமிராண்டித்தனமாக கொன்று, உணவாகப் புசித்து வந்த தம்பதியினர் இருவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வரும் 35  வயதுடைய டிமிட்ரி பக்ஷீவ் எனும் பெயருடைய கணவரும், அவரின் மனைவியான 45 வயதுடைய நட்டாலியா என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிமிட்ரி பக்ஷீவ்வின் கைத்தொலைபேசி இம்மாதம் வீதியோரத்தில் தொலைந்தது. அந்த தொலைபேசியில் அவர் கொன்ற பெண் ஒருவரின் உடற் பாகங்களுடன், அவர் ‘போஸ்’ கொடுத்து எடுத்திருந்த படங்கள் சேமிக்கப்பட்டிருந்தன. இந்த தொலைபேசி கண்டெடுக்கப்பட்டதையடுத்தே, விவகாரம் வெளியே தெரிந்தது.

டிமிட்ரியால் கொல்லப்பட்ட பெண்ணின் உடற் பாகங்கள், பையொன்றினுள் இடப்பட்ட நிலையில், அப் பெண் காணாமல் போன சில நாட்களில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. டிமிட்ரி பணியாற்றும் அலுவலகத்துக்கு அருகிலே அந்தப் பை கண்டெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் டிமிட்ரி தனது குற்றத்தை மறுத்த போதும், அவரின் கைத் தொலைபேசியில் சேமிக்கப்பட்ட படங்களைக் காண்பித்த பின்னர், தனது குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

டிமிட்ரியின் மனைவி நட்டாலியா இது குறித்து கூறுகையில்; 1999ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் தாம் இவ்வாறு 30 பேரை கொன்று புசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களைக் கொல்வதற்கு முன்னதாக அவர்களுக்கு போதை மருந்தொன்றினைக் கொடுத்து மயக்கமுறச் செய்ததாகவும், அதன் பின்னர்தான் அவர்களைக் கொன்றதாகவும் கைது செய்யப்பட்ட தம்பதியினர் கூறியுள்ளனர்.

இவர்களின் இருப்பிடத்தை பொலிஸார் சோதனையிட்ட போது, மனித உடற் பாகங்கள் அங்கு காணப்பட்டுள்ளன.

அதேவேளை, அவர்கள் சேமித்து வைத்த படமொன்றில், மனித தலையொன்றுடன் வர்கள் ‘போஸ்’ கொடுத்து படமெடுத்துள்ளதோடு, ‘கிறிஸ்மஸ் உணவு’ என்று, அந்தப் படத்தைக் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மனித இறைச்சி மற்றும் உடற்பாகங்கள் குளிர்சாதனப் பெட்டியிலும், போத்தல்களிலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்