சமையல் எரிவாயு விலையில் சடுதியான அதிகரிப்பு; நள்ளிரவு அமுலுக்கு வருகிறது

🕔 September 25, 2017

மையல் எரிவாயுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தை சமையல் எரிவாயு நிறுவனங்கள் எடுத்துள்ளன.

அதற்கிணங்க, 12.5 கிலோகிராம் எரிவாயுவுக்கான விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது அம்பாறை மாவட்டத்தில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1435 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை அதிகரிப்பினையடுத்து 12.5 கிலோகிராம் எரிவாயு 1545 ரூபாவுக்கு விற்கப்படும்.

கொழும்பில் இந்த விலையில் சிறிது குறைவான மாற்றத்துடன் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும்.

கொழும்பிலிருந்து எரிபொருளை ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லும் போது ஏற்படும் போக்குவரத்துச் செலவுகள், எரிவாயு விலையுடன் சேர்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்