ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம்

🕔 September 25, 2017

– எம்.எப். நவாஸ் –

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை மையவாடியில் மாபெரும் சிரமதானப் பணியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை இணைத்துக் கொண்டு, ஊடகவியலாளர் பேரவையின் அங்கத்தவர்கள் இந்த சிரமதானப் பணியினை மேற்கொண்டனர்.

ஊடக நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி, சமூக சேவை செயற்பாடுகளிலும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரவையின் தலைவர் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பணியில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த சிரமதானப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

அந்த வகையில், நேற்றைய சிரமதானப் பணியானது மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக, அதன் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் கே.ஏ. ஹமீட் தெரிவித்தார்.  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்