அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானப் பணி

🕔 September 23, 2017

– முன்ஸிப் –

ம்பாறை மாட்ட ஊடகலவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை மையவாடியில் பாரியளவிலான சிரமதானப் பணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 6.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் இந்த சிரமதானத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடக நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி சமூக சேவை செயற்பாடுகளிலும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

பொதுசனம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் ஊடகவியலாளர்களுக்குள்ள உறவினை வைத்து, பல் தரப்புக்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஆற்றல் ஊடகவியலாளர்களுக்கு அதிகம் உள்ளது. அந்த ஆற்றலை  சமூக சேவை நடவடிக்கைகளுக்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை பயன்படுத்திக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையில் முஸ்லிம் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அதனால், முஸ்லிம் – தமிழ் மக்களின் சமூக, சமய, கலாசார மற்றும் அரசியல் விவகாரங்களில் மேம்பாட்டினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்துவதற்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்