பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார்

🕔 September 19, 2017

முன்னாள் பிரதியமைச்சரும், ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அருந்திக பெனாண்டோ, இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றின் எதிரணி வரிசையில் அமர்ந்தார்.

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சராகப் பதவி வகித்த அவரை, கடந்த 12ஆம் திகதி, அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்கியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான இவர், பிரதியமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டே, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவராகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெனாண்டோவை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் பல்வேறு தடவை விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றினை ஆற்றிய அருந்திக பெனாண்டோ, எதிரணி வரிசையில் அமர்ந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்