சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது

🕔 September 16, 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியினை மீண்டும் அமைத்து, அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி ஆர்வம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் பல கட்சிகள் கூட்டிணைந்து சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் போட்டியிட்டமை நினைவு கொள்ளத்தக்கது.

இது தொடர்பில் சந்திரிக்கா தலைமையில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, விஜித் விஜயமுனி சொய்ஸா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் அதாவுட செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்ட நடவடிக்கைக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

1994ஆம் ஆண்டு, பொதுஜன ஐக்கிய முன்னணியில் பல கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிட்ட நிலையிலேயே சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது.

தற்போது சுதந்திரக் கட்சியின் தலைமையில் செயற்பட்டு வரும் வெற்றிலையை சின்னமாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள இனவாதக் கட்சிகளை, கூட்டணியிலிருந்து நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களில் சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறி வந்த, அந்தக் கட்சியின் சிரேஸ்ட தொகுதி அமைப்பாளர்கள், கூட்டணி அமைத்து கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தற்போது விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்