முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு

🕔 September 15, 2017

ம்பாறை மாவட்டம் அறுகம்பே பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடவியலாளர், இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

‘பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரான இவர், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வேளையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

அறுகம்பே பிரதேசத்துக்கு அருகிலுள்ள குடாக்கள்ளி ஆற்றில் கைகளைக் கழுவுவதற்காக இவர் சென்றபோது, முதலலை இழுத்துச் சென்றுள்ளது.

முதலையினால் இவர் இழுத்துச் செல்லப்பட்டபோது, இவர் தனது கைகளை நீருக்கு மேலாக அசைத்தமையினை சிலர் கண்டுள்ளனர்.

போல் மெக்லன் (வயது 25) எனும் மேற்படி ஊடகவியலாளர், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பிரன்ச் மொழியில் பட்டப்படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது நண்பர்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்த வேளையில், இவ்வாறு முதலைக்குப் பலியாகியுள்ளார்.

இந்த நிலையிலேயே மேற்படி ஊடகவியலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்