விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர் 20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன்

🕔 September 14, 2017

கிழக்கு மாகாண சபையினர் விளங்காத் தன்மையினால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கக் கூடும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அண்மையில் கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 20ஆவது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் விளங்காத் தன்மையினால் தமது ஆதரவினைத் தெரிவித்திருக்கக் கூடும் எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வட மாகாண சபையின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களை விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

20ஆவது திருதச் சட்டமூலம் தொடர்பில் எந்தவித திருத்தங்களும் வரவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் முறையாகப் பரிசீலித்து, சரியான முடிவுக்கு வருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்