மு.கா. தலைவர் ஹக்கீம் கலந்து கொள்ளும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு

🕔 September 14, 2017
– பிறவ்ஸ் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம்  எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தலைப்பில் நாளை மறுதினம் 16ஆம் திகதி பி.ப. 3.30 மணிக்கு பொத்துவில் அஷ்ரஃப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் அப்துல் வாஸித் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களான எஸ்.எல்.எம். ஹனீபா, உமா வரதராஜன் மற்றும் எஸ்.எச். ஆதம்பாவா ஆகியோர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றி விசேட தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளனர். அத்துடன் அஷ்ரஃப் பற்றிய ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அஷ்ரஃபின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கடந்த வருடம் நடைபெற்ற “அழகியதொனியில் அல்குர்ஆன்” போட்டியில் வெற்றிபெற்றவர்களின் மீள் அரங்கேற்றம், பிரமாண்டமான மேடையமைப்புடன் ஒலி, ஒளி நிகழ்வாக அன்றையதினம் மேடையேற்றப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்