சட்ட விரோதமாக காணி, வீடு வாங்கிய குற்றச்சாட்டு: நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் யோசித ஆஜர்

🕔 September 14, 2017

ஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று வியாழக்கிழமை காலை ஆஜரானார்.

பணச் சலவை மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு இவர் ஆஜரானார்.

இவர் சட்ட விரோதமாகப் பணம் செலுத்தி கல்கிசை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடு ஆகியவற்றினைக் கொள்வனவு செய்தார் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் நேற்று முன்தினம் இவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தும், தனிப்பட்ட விடயம் காரணமாக தன்னால் அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என்று அறிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்