பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம்
சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து அருந்திக பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அருந்திக பெனாண்டோவை பிரதியமைச்சர் பதவியிலிருந்து, ஜனாதிபதி நீக்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு இவர் தெரிவானார்.
இவர் மஹிந்த ராஜபக்ஷ அபிமானி என்பது குறிப்பிடத்தக்கது.