ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல்

🕔 September 10, 2017

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய சகோதரர் நனசிறி பக்னரத்ன சிறிசேன என்பவரை நாளை 11ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு பொலநறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சகோதரர் நனசிறியின் கப் ரப வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலியாயினர்.

இந்த விபத்து பொலநறுவை – அதுமல்பிட்டியவில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

விபத்தினையடுத்து கப் ரக வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் வாகனத்தை ஓட்டிய சாரதியை பொலிஸார் கைது செய்தமையினை அடுத்து, ஜனாதிபதியின் சகோதரர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்தமையினை அடுத்து, நாளை திங்கட்கிழமை வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்