உயர்தரப் பரீட்சையில் வினாப் பத்திரத்தை அம்பலப்படுத்திய மாணவருக்கு, ஆயுட்காலத் தடை

🕔 September 2, 2017

.பொ.த. உயர்தர பரீட்சையில் முறைகேடாக நடந்து கொண்ட மாணவர் ஒருவருக்கு, வாழ்நாள் முழுவதும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உயர்தரப்பரீட்சையின் ரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சை வினாப் பத்திரத்தினை பரீட்சை நிறைவடைவதற்கு முன்னதாக குறித்த மாணவன் அம்பலப்படுத்தினார்.

இக் குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்து, இவருக்கு மேற்படி வாழ்நாள் தண்டனையினை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர் – பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் எந்தவித பரீட்சைகளிலும் அவரின் வாழ்நாளில் தோற்ற முடியாது என்று, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி மாணவர், கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்