தியாகங்களால் அன்பினை வளர்த்துக் கொள்வோம்: புதிது செய்தித்தளத்தின் பெருநாள் வாழ்த்து

🕔 September 2, 2017

ஜ் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் ‘புதிது’ செய்தித்தளம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஹஜ் பெருநாள் என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டமல்ல. இது மாபெரும் தியாகமொன்றினை நினைவு கூறும் ஒரு நாளாகும். இறைவனின் கட்டளைக்காகவும், திருப்திக்காகவும் எதையும் செய்யத் தயங்காத ஒரு தியாகத்தை உலகம் ஞாபகித்துக் கொண்டிருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் சிறிதாகவும் பெரிதாகவும் ஏராளமான தியாகங்களைச் செய்து கொண்டேயிருக்கிறோம். தியாகங்கள் ஒவ்வொன்றும் அன்பு, கருணை மற்றும் விட்டுக் கொடுப்பிலிருந்தே பிறக்கின்றன.

சில தியாகங்களை – தியாகங்கள் என்று தெரியாமலேயே நாம் செய்து கொண்டிருக்கிறோம். சிலருக்கு மற்றவர்கள் செய்யும் மிகப் பெரும் தியாகங்கள் கூட கண்ணில் படுவதில்லை.

எவ்வாறாயினும், இறைவனின் சன்னிதானத்தில் எல்லாத் தியாகங்களும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இறைவனின் திருப் பொருத்தத்தத்தினை பெற்றுக் கொள்ளாத எந்தத் தியாககங்களும், அதற்குரிய பலனை அடைவதில்லை.

தியாகங்களால் அன்பினை வளர்த்துக் கொள்வோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்