பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு
சோற்றுப் பார்சலுக்கான விலை, நாளை சனிக்கிழமையிலிருந்து, 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம், இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.
20 மைக்ரோன் தடிப்பம் கொண்ட பொலித்தீன்களை பாவிப்பதற்கான தடை, இன்று முதல் அமுலுக்கு வந்தமையினை அடுத்து, இந்த விலை அதிகரிப்புக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி பொலித்தீன் தடை காரணமாக, லன்ச் சீட் பயன்படுத்த முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.