ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம்

🕔 August 31, 2017

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலுள்ள இரண்டு தேர்தல் தொகுதிகளுக்கு, ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக முஸ்லிம்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொலநறுவை தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக பக்கீர் முகைதீன் சாஹுல் ஹமீத் என்பரும், மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக முஸ்தபா நசுறுதீன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை, நேற்று புதன்கிழமை சுதந்திக் கட்சியின் தலைவர் எனும் வகையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்