தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தம் படுதோல்வி

🕔 August 29, 2017
ரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வியடைந்துள்ளது.

தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் இன்று செவ்வாய்கிழமை தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தத்தை வாக்கெடுப்புக்கா சமர்ப்பித்தார்.

இதன்போது சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அமைதியற்ற நிலைமை தோன்றியது. இதனால் செங்கோலுக்கும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில் 20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக எவரும் வாக்களிக்காத நிலையில், எதிராக 27 பேர் வாக்களித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்