பதவி நீக்கப்பட்ட விஜேதாஸ, அமைச்சிலிருந்து வெளியேறினார்

🕔 August 23, 2017

விஜயதாச ராஜபக்ஷ, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையினை அடுத்து, இன்று புதன்கிழமை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சிலிருந்து வெளியேறினார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று  நடவடிக்கை எடுத்தார்.

இதற்கிணங்க, விஜயதாச ராஜபக்ஷவை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாக, ஜனாதிபதி செயலகத்தினால் இன்றைய தினம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை மீறியமை, சில வழக்குகளை விசாரணை செய்யாமல் கால தாமதம் செய்தமை, நீதியமைச்சராக தன் கடமையினை செய்யாமை உள்ளிட்ட பல காரணங்களை முன்னிறுத்தி, விஜேதாஸ ராஜபக்ஷவை, அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதென, அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்