சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு

🕔 July 25, 2015

Nimal+Dilan - 01ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுவாகப் பார்த்தால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவே, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த நாட்டிலுள்ள பெருமளவான மக்கள், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்டு வரவேண்டுமென விரும்புகின்றனர். இதனடிப்படையில், ஓகஸ்ட் 18 ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷ – பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.  இந்தவகையில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பாரிய தியாகத்தினைச் செய்துள்ளார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறினார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனிமேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, 19 ஆவது யாப்புத் திருத்தத்தின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் – ஜனாதிபதித் தேர்தலொன்றில் போட்டியிட முடியாது.

எனவே, நியாயப்படி, 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில், நிமல் சிறிபால டி சில்வாவுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென, டிலான் பெரேரா தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்