விஜேதாஸ விவகாரம்; கருணை காட்ட, மைத்திரி தீர்மானம்
விஜேதாஸ ராஜபக்ஷவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜேதாஸவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி விடுமாறு, ஜனாதிபதியிடம் இன்று செவ்வாய்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் – தான் போட்டியிட்டபோது, தனது வெற்றிக்காக விஜேதாஸ உழைத்தவர் என்பதனால், அவரை பதவியிலிருந்து நீக்குவதை விடவும், ராஜிநாமா செய்ய வைப்பதையே ஜனாதிபதி விரும்புவதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்யுமாறு விஜேதாஸவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை, அவர் ஏற்கனவே நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.