சுதந்திர கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

🕔 August 21, 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கட்சியின் அங்கத்தவர்களுக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து மாதம் 03ஆம் திகதி, சுதந்திரக் கட்சியின் 66ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு – பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்