டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல்

🕔 August 21, 2017

டொம்மியா என்கிற தங்கள் வளப்பு நாய் மட்டும்தான் தற்போதைய அரசாங்கத்தில், பொலிஸ் விசாரணையிலிருந்து தப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி மற்றும் மகன் ரோஹித ராஜபக்ஷ ஆகியோரிடம் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பாக, மஹிந்தவிடம் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டபோதே, அவர் மேற்கண்ட பதிலைக் கூறினார்.

“என்னுடைய குடும்பத்தவர்கள் எல்லோரையும் பொலிஸார் விசாரித்து விட்டனர். அவர்கள் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டு விட்டன. டொம்மியா மட்டுமே இதுவரை விசாரிக்கப்படவில்லை” என்று, அவர் நக்கலாகக் கூறினார்.

இந்த விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்