விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா

🕔 August 20, 2017

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜக்ஷ, நாளை திங்கள்கிழமை தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தசாசன அமைச்சில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் அமைச்சர், அங்கு தனது ராஜிநாமாவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் நாளை காலை விசேட அறிக்கையொன்றினை விடுக்கவுள்ளார் எனவும், அதன் பின்னர் தனது பதவியை ராஜிநாமா செய்வார் எனவும், விஜேதாஸவுக்கு நெருங்கிய தரப்புக்கள் கூறுகின்றன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ வெளியிட்ட விமர்சனம் காரணமாக, அவர்மீது அரசாங்கம் நம்பிக்கை இழந்துள்ளது.

மேலும், சில வழக்குகளை விசாரிக்காமல் இழுத்தடித்து வருகின்றமை குறித்தும், அமைச்சர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினர், கடந்த வாரம், அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினைக் கொண்டு வந்து, கட்சிக்குள் நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்