பொருட்கள், சேவைகளுக்கு அதிரடியாக வரிக்குறைப்பு; சிறிய ரக லொறிகளுக்கு 03 லட்சம் ரூபாய் விலை குறைகிறது: நிதியமைச்சு அறிவிப்பு

🕔 August 17, 2017

பொருட்கள் மற்றும் சேவைகள் சிலவற்றுக்கான வரிகளை நீக்குவதாகவும், குறைப்பதாகவும் இன்று வியாழக்கிழமை நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில், இன்டநெட் சேவை மீதான 10 வீத வரி, செப்படம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளது.

மேலும், 150 சி.சி. வலுவுக்குக் குறைவான  மோட்டார் சைக்கிள்களுக்கான வரியில் 90 வீதமானவை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது.

அதேபோன்று, சிறிய ரக லொறி மற்றும் தனி கப் ரக வாகனங்களுக்கான வரி, 03 லட்சத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று நள்ளிரவு முதல் இது அமுலுக்கு வருமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்