கட்சிக்குள் கலகம்; பதிலின்றி வெளியேறினார், நீதியமைச்சர் ராஜபக்ஷ

🕔 August 12, 2017

க்­கிய தேசிய கட்­சியின் சில நாடா­ளு­மன்ற உறுப்பினர்கள், தனக்கு எதிராக நம்பிக்கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில், கருத்துக் கூறு­வ­தற்கு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ மறுத்­துள்ளார்.

நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷவிற்கு எதி­ராக, ஐக்கிய தேசியக் கட்­சியின் பின்வரிசை நாடாளு­மன்ற உறுப்­பி­னர்கள், நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­ ஒன்றினை கொண்­டு­வ­ரு­வ­தற்கு  தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்ளது. இந்த நிலையில், நீதி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்­பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் அவ­ரிடம் கேள்வி எழுப்பினர்.

எனினும் தன்னால் அந்த கேள்­விக்கு பதிலளிக்க முடியாது எனக்­கூறி அவர் அவ்விடத்தை விட்டு வெளியே­றினார்.

நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக்ஷவின் ஒரு சில செயற்­பா­டுகள் குறித்து, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை நாடாளுமன்ற உறுப்­பி­னர்கள் 18 பேர் அவ­ருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வர தீர்­மா­னித்­துள்­ள­தாகவும் அவர்கள் நேற்று முன்­தினம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து குறித்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை நீதி அமைச்­ச­ருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்தை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகிறது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்