ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

🕔 August 10, 2017

வி கருணாநாயக்க, அவர் வகித்த அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்துள்ளமையினால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை, நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை சபையில் அறிவித்தார்.

இருந்தபோதும், ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக, நேற்று முன்தினம் நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதிவியை இன்று நண்பகல் ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரவி கருணாநாயக்கவின் குடும்பத்தினர் அண்மையில் கொள்வனவு செய்த வீடு ஒன்றுக்கு, மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் அலோசியஸ் பணம் செலுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ,பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, ரவி கருணாநாயக்கவிடமும் விசாரணை நடத்தியது.

இதனையடுத்து எழுந்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக, ரவி ராஜிநாமா செய்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்