ரணில் – ரவி ரகசிய சந்திப்பு

🕔 August 7, 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், அவரை பதவி விலகுமாறும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே, பிரதமர் ரணிலை, ரவி கருணாநாயக்க ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments