கொள்ளையர்கள் கொண்டு வந்துள்ள பிரேரணை, வேடிக்கையானது: அனுர

🕔 August 6, 2017

ஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியில் கொள்ளையடித்தவர்தான், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளனர் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி விடயத்தைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த – சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் வேடிக்கையானது.

ரோஹித்த அபேகுணவர்தன, காமினி லொக்குகே, மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, எஸ்.எம். சந்திரசேன மற்றும் விமல் வீரவங்ச போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் கொள்ளையில் ஈடுபட்டவர்களாவர். கொள்ளையடித்தவர்கள் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளமைதான் வேடிக்கையானது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்