ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில் திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

🕔 August 2, 2017

மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 02 இலக்கம் மாகாண தேர்தல் சட்டம் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடவும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவற்கான முன் மொழிவினை, பிரதர் ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் அமைச்சரவையில் சமர்த்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்