குற்றச் செயல்கள் பற்றி அறிந்தால், நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்: யாழில் பொலிஸ் மா அதிபர்
🕔 August 1, 2017
– பாறுக் ஷிஹான் –
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவையாக உள்ளன என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இக்கூட்டத்தில் , பல இடங்களில் இருந்தும் வருகை தந்த மக்கள் கலந்து கொண்டனர்.
யாழ் குடநாட்டில் இடம்பெறும் சகல குற்றச் செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்குமாறு மக்களிடமும் ஊடகங்களிடமும் இதன்போது பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்தார்.
குற்றச்செயல்கள் குறித்து ஏதாவது தகவல்கள் தெரிந்தால் 0717582222 அல்லது 0718592020 என்ற தனது தொலைபேசி இலக்கங்களுக்கு நேரடியாகத் தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.