ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது
வட்டரக்க விஜித தேரர் இன்று செவ்வாய்கிழமை மதியம் கொழும்பு – கோட்டே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியில், வன்முறையாக நடந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைது செய்தனர்.
சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கண பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தரை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்தின் முன்னால், இன்று காலை முதல், வட்டரக்க தேரர் உண்ணாவிரதம் இருந்ததாகத் தெரிய வருகிறது.
இந்த நிலையில், அவ்விடத்துக்கு வந்த பொதுபல சேனா அமைப்பினர், தேரரை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே தேரர் கைதாகியுள்ளார்.
இந்த நிலையில், தேரரின் உடல் நிலை கருதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் பாதுகாப்புடன் அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.