இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு
இலங்கையில் ஆகக்குறைந்தது 60 ஆயிரம் பேர், ஹெரோயின் போதைப் பொருள் நுகர்வோர்களாக உள்ளனர் என்று, உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரியளவிலான ஹெரோயின் பாவனையாளர்கள் இலங்கையில் உள்ளனர் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் கே. கமகே சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் 02 லட்சம் பேர் கஞ்சா நுகர்வோர்களாக உள்ளனர் எனவும் கமகே குறிப்பிட்டார். நுகரப்படும் கஞ்சாவில் அதிகமானவை, இந்தியாவிலிருந்து கடத்தி வரப்படுபவை எனவும் அவர் கூறினார்.
இலங்கைக்குள் ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியவற்றினை கடத்திவரும் செயற்பாடுகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடல் வழியாக இலங்கைக்குள் ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியவற்றினைக் கடத்தி வரும் முகவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கமகே தெரிவித்தார்.